கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ! இலங்கையில்  கொவிட் தொற்றால் 32 கர்ப்பிணிகள் பலி : 900 பேருக்கு சிகிச்சை !

Published By: Gayathri

30 Aug, 2021 | 05:30 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றின் காரணமாக இதுவரையில் 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். 

முதலாம் அலை தொடக்கம் இதுவரையில் 4200 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, தற்போது 900 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் ,

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கும் வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரையில் 75 சதவீதமான கர்ப்பிணிகள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

எனினும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் துரிதமாக அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். 

காரணம் கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அவர்கள் தீவிர நிலைமையை அடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

கொவிட் தொற்றின் காரணமாக இதுவரையில் 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். இது அபாயமான நிலைமையாகும். 

கர்ப்பிணிகள் துரிதமாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38