(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமையின் காரணமாக அறிகுறியற்ற தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதற்கமைய இதுவரையில் 27,563 கொவிட் தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.