மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரின் கழுத்தில் இருந்த 3 பவுண் தங்க சங்கிலியை நபர் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உரிமையாளர் தனது வீட்டை இடித்து புனரமைத்து வருகின்ற நிலையில் அதே காணியில் தற்காலிகமாக வீடு ஒன்றை அமைத்து வசித்துவருகின்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் வயதான மாமரியர் உட்பட 3 பேர் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டின் தகர கதவை திறந்து வீட்டிற்குள் புதுந்த கொள்ளையர் ஒருவர் உறக்கத்தில் இருந்த 45 வயதுடைய பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றிதருமாறும் இல்லாவிட்டால் கத்தியால் வெட்டி கொலை செய்வதாக மிரட்டியதையடுத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்த நிலையில் அதனை பறித்தெடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸ் தடயவியல் பகுப்பாய்வு பிரிவினர் சென்று கொள்ளை தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM