கொவிட் உயிரிழப்பு தரவுகளில் பாரிய வேறுப்பாடு : அரசாங்கம் உண்மையைக் கூற வேண்டும் - மரிக்கார்

Published By: Digital Desk 4

31 Aug, 2021 | 10:24 AM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியிலுள்ள எமது கட்சி அலுவலகங்களின் ஊடாகத் திரட்டிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது தற்போது அரசாங்கத்தினால் வெளியிடப்படும் கொவிட் - 19 தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் உண்மையான தரவுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளதை அவதானிக்கமுடிவதாகத் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

Articles Tagged Under: நம்பிக்கையில்லாப் பிரேரணை.எஸ்.எம்.மரிக்கார் |  Virakesari.lk

அத்தோடு அரசாங்கம் உண்மையான தரவுகளை வெளியிடும் பட்சத்திலேயே பொதுமக்கள் தொற்றுப்பரவலின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு அவதானத்துடன் செயற்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தன்மையை உணர்ந்துகொண்டு, உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி வீடுகளில் இருக்கவேண்டும் என்பதற்காகவே இப்போது நாடு முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றது. 

அவ்வாறெனின், தடுப்பூசி வழங்கல் தொடர்பில் உரியவாறு தரவுகள் வெளியிடப்படுவதைப்போன்று, கொவிட் - 19 தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்பிலும் சரியான தரவுகள் வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள எமது கட்சி அலுவலகங்களின் ஊடாகத் திரட்டிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது தற்போது அரசாங்கத்தினால் வெளியிடப்படும் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் உண்மையான எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளதை அவதானிக்கமுடிகின்றது. ஆகவே உண்மையான தரவுகளை வெளியிடுவதன் ஊடாகவே பொதுமக்கள் அதன் பாரதூரத்தன்மையை விளங்கிக்கொண்டு மேலும் அவதானத்துடன் செயற்படுவர்.எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56