(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை  கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும்  இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. எதிர்வரும் மாதம் நடைப்பெறவுள்ள மனித உரிமை  மற்றும் ஐ. நா. பொதுச்சபை  கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும்.என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஷ் தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இனறு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 ஐக்கிய நாடுகள் மனித உரிமை  கூட்டத்தொடர்,ஐ.நா.  பொதுச்சபை கூட்டம் ஆகிய கூட்டங்களில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்மானங்களை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். இலங்கை அனைத்து நாடுகளுடனும் நல்லிணக்கமாகவே செயற்படும்.

மகாசங்கத்தினர் உட்பட மத தலைவர்களின் ஆலோசனைகள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டியுள்ளோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் வேதனைககுரியதாக உள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பெறுபேறு மற்றும் எதிர்காரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடடிக்கைகள் குறித்து மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகைக்கு தெளிவுப்படுத்தவுள்ளோம்.