(எம்.எம்.சில்வெஸ்டர்)

பலரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து உலக சாதனையுடன் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற  தினேஷ் பிரியன்தவின், போட்டி‍யையடுத்து இன்று மாலை இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆண்களுக்கான பிரிவு 64 இன் ஈட்டி எறிதல் போட்டியில் சம்பத் ‍ஹெட்டியராச்சி, துலான் கொடிதுவக்கு ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர்.

இந்தப் போட்டியில் இலங்கையர்கள் இருவருடன், இந்தியா, பிரேஸில் நாடுகளிலிருந்து தலா இருவரும், அவுஸ்திரேலியா, உக்ரைன், அமெரிக்கா, பிஜீ ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவர் அடங்கலாக 10 பேர் போட்டியிடுகின்றனர்.  

இப்போட்டியின் உலகச் சாதனைக்கு சொந்தக்காரராக போட்டிப் பிரிவில் பங்கேற்கும் இந்திய வீரரான சமித் விளங்குகிறார். 

இதேவேளை, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவு 46 இன் ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியன்த உலக சாதனை, பராலிம்பிக் சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்றமை, சம்பத் மற்றும் துலான் ஆகிய இருவருக்கும் மேலும் புது உத்வேகத்துடன் நம்பிக்கையளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.