அம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் உட்பட 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 3 பொலிஸ் சார்ஜன்கள்  மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபல் ஆகியோர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கதிர்காமம், திஸ்ஸமஹாராம, தங்கல்லை மற்றும் பெலியத்த ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.