ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் நெல் வயலில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஒரு கைக் குழந்தை உட்பட நான்கு பேர் அனர்த்தத்தில் காயமடைந்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று மாலை பாசியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜக்ஜோர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

துர்கா சிங் (வயது 45) மற்றும் அவரது மகள் புஷ்பா குமாரி (வயது 18) ஆகியோர் வயலில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

துர்கா சிங்கின் மனைவி சகோதரா தேவி, புதவிகளான பாரதி குமாரி (வயது8), புனிதா குமாரி (வயது5) மற்றும் இரண்டு மாத கைக்குழந்தை ஆகியோரே அனர்த்தத்தில் காயமடைந்த ஏனையவர்கள் ஆவர்.

அவர்கள் உடனடியாக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.