சுகாதார அமைச்சின் ஸ்திரமற்ற செயற்பாடுகளினால் வைரஸ் தொற்று தீவிரமாக பரவுகிறது - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Published By: Digital Desk 3

30 Aug, 2021 | 09:20 AM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சின் ஸ்திரமற்ற செயற்பாடுகளின் காரணமாக எவ்வித திட்டமிடலும் இன்மையால் வைரஸ் தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு காணப்பட்டாலும் , அவரது இலக்கை அடைவதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியவர்களை உரிய முறையில் செயற்படாவிட்டால் வெற்றி பெற முடியாது என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுகாதார அமைச்சின் ஸ்திரமற்ற செயற்பாடுகளின் காரணமாக எவ்வித திட்டமிடலும் இன்மையால் வைரஸ் தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு காணப்பட்டாலும் , அவரது இலக்கை அடைவதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியவர்களை உரிய முறையில் செயற்படாவிட்டால் வெற்றி பெற முடியாது.

நாட்டிலுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் அவர்களுக்கு காணப்படும் அனுபவத்தைக் கொண்டு கொவிட் நிலைமை தொடர்பில் சுகாதார அமைச்சிற்கு தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் தற்போது சுகாதார அமைச்சானது செயலாற்ற முடியாத ஒரு அமைச்சாகவே காணப்படுகிறது.

60 ஆண்டுகளாக நாட்டின் சுகாதார கட்டமைப்பு எவ்வாறு காணப்பட்டது என்பது குறித்த அனுபவம் எமக்குள்ளது. அந்த கால கட்டத்தில் எவ்வித நெருக்கடிகளும் இன்றி மக்களுக்கு சுகாதார சேவை வழங்கப்பட்டது.

சுகாதார அமைச்சிடம் முகாமைத்துவமும் இல்லை. முறையான கண்காணிப்பும் இல்லை. தற்போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவரிடம் குப்பை கூலமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் , அதனை துரிதமாக தூய்மைப்படுத்துமாறும் நாம் அவரிடம் தெரிவித்துள்ளோம்.

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கப்படுவதாகக் கூறினாலும் , அந்த வேலைத்திட்டம் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டை முடக்க வேண்டிய காலத்தில் முடக்கவில்லை. தற்போது வைரஸ் தீவிரமடைந்து நிறைவடைந்தவுடன் நாடு முடக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன கூறியதைப் போன்று ஆரம்பத்திலேயே நாடு முடக்கப்பட்டிருக்குமாயின் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

தற்போது பெருமளவான சுகாதார ஊழியர்களும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதே நிலைமை தொடருமாயின் சுகாதார சேவை கட்டமைப்பும் இல்லாமல் போகும். தற்போது வைத்தியசாலைகளிலும் , வீடுகளிலும் நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வழமைக்கு மாறாக அதிகளவான மக்கள் வீதிகளில் நடமாடுகின்றனர். இது பிரயோசனமற்றதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32