காபூலில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்; 6 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பலி

By Vishnu

30 Aug, 2021 | 08:28 AM
image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பலியாகினர் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சி.என்.எனிடம் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் ஒருவரின் சகோதரர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.எனில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளரிடம், உயிரிழந்தவர்கள் ஒரு சாதாரண குடும்பம் என்றும் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும் கூறினார்.

உயிரிழந்தவர்களில் அவரது நான்கு வயது சகோதரி அர்மின், 3 வயது சகோதரர் பென்யமின் மற்றும் இரண்டு வயது சகோதரிகளான அயத் மற்றும் சுமையா உட்பட ஆறு சிறுவர்கள் உள்ளனர் என்று அவர் உறுதிபடுத்தினார்.

இதேவேளை இரண்டு வாகனங்கள் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதியை அழித்த விமானத் தாக்குதலில் குறைந்தது நான்கு சிறுவர்கள் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.

இரண்டாம் நிலை வெடிப்பு பயங்கர வாதிகளால் வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை முழுமையாக அழித்து விட்டது.

மேலும் காரில் பயணம் செய்த ஒரு தற்கொலை குண்டுதாரியும் இதன்போது பலியானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52