பராலிம்பிக்கில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கக்கூடிய போட்டி நாளை

Published By: Gayathri

29 Aug, 2021 | 05:31 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஜப்பானில் நடைபெற்றுவரும் 16 ஆவது பராலிம்பிக்கில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கக்கூடிய போட்டி நிகழ்வாக எதிர்பார்க்கப்படும் ஈட்டிஎறிதல் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது. 

2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் பிரிவு எப் 46 இல் களமிறங்கவுள்ளார். 

மேலும், சம்பத் ஹெட்டியராச்சி, துலான் கொடித்துவக்கு ஆகியோர் பங்கேற்கும் பிரிவு 64 ஈட்டி எறிதல் போட்டியும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.  

2016 ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான எப். 46 பிரிவின் ஈட்டி எறிதல் போட்டியில் 58.23 மீற்றர் வீசி வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த இம்முறையும் பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் நாளைய தினம் காலை 8.30 மணிக்கு களமிறங்கவுள்ளார். 

மேலும், ஆண்களுக்கான எப்.64 பிரிவின் ஈட்டி எறிதலில் சம்பத் ஹெட்டியாராச்சி, துலான் கொடிதுவக்கு ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர். 

இதில் சம்பத் ஹெட்டியாராச்சி பதக்கமொன்றை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தப் போட்டி இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 24 ஆம் திகதியன்று ஆரம்பமான டோக்கியோ பராலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்பதற்கு 9 இலங்கையர்கள் தகுதி பெற்றனர். 

இதில் நேற்றுடன் நிறைவடைந்த ஆண்களுக்கான தனிநபர் பி.ஆர்.ஐ. படகோட்டப் போட்டியின் நிரல்படுத்தலுக்கான போட்டியில் பங்‍கேற்ற பிரியமல் ஜயகொடி 13 நிமிடங்கள் 12.33 செக்கன்களில் நிறைவுசெய்து கடைசி இடமான  6 ஆவது இடத்தை பிடித்தார். 

எனினும், இப்போட்டியின் இரண்டாவது சுற்றில் 11 நிமிடங்கள் 21.31 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை பராலிம்பிக்கில் அவரின் சிறந்த நேரப்பெறுதியாக அமைந்தது.  

இதேவேளை, படகோட்டத்தின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற உக்ரைனின் ரோமன் பொலியன்ஸ்கி (9நிமிடங்கள் 48.78 செக்கன்கள்) தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியாவின் ஹொரி எரிக் (10நிமிடங்கள் 00.82 செக்கன்கள்)  வெள்ளிப் பதக்கத்‍தையும், பிரேஸிலின்  கெம்பொஸ் பெரெய்ரா (10நிமிடங்கள் 03.54 செக்கன்கள்)  வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். 

பராலிம்பிக்கில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கக்கூடிய போட்டி நிகழ்வாக எதிர்பார்க்கப்படும் ஈட்டிஎறிதல் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20