9 கொவிட் மரணங்கள் ஒரு மணித்தியாலத்தில் பதிவாகின்றன : அதி அவதான மட்டத்தில் இலங்கை - மருத்துவ சங்கம்

Published By: Gayathri

29 Aug, 2021 | 05:27 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஒரு மணித்தியாலத்திற்கு 9 கொவிட் மரணங்கள் பதிவாகின்றன. இவ்வாறு அதிகளவான மரணங்கள் பதிவாகின்றமை கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை அல்ல. 

இதனடிப்படையில் அவதானிக்கும்போது இலங்கை உண்மையில் அதிக அவதான நிலையிலேயே உள்ளது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

நாட்டின் கொவிட் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கை உண்மையில் அதிக அவதான நிலையிலேயே உள்ளது. மணித்திலாயத்திற்கு 9 கொவிட் மரணங்கள் பதிவாகின்றன. 

அதனடிப்படையில் மணித்தியாலயத்திற்கு இவ்வாறு அதிகளவான மரணங்கள் பதிவாகின்றமை கட்டுப்படுத்தக் கூடிய நிலைமை அல்ல. 

எனவே வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து மக்கள் தெளிவு பெறுவது அத்தியாவசியமானதாகும்.

டெல்டா வைரஸ் கொழும்பிலேயே பரவ ஆரம்பித்தது. தற்போது மிகவும் வேகமாக ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருப்பது இந்த வைரஸாகும். 

டெல்டா வைரஸ் திரிபடைந்து புதிய மாறுபாடுகளும் வேகமாக பரவி வருகின்றன. கொழும்பில் 100 சதவீதம் டெல்டா பரவியுள்ளது. இவற்றில் அதிகளவாகக் காணப்படுவது இந்த புதிய மாறுபாடாகும்.

உலக சுகாதார ஸ்தாபனம் ஏனைய நாடுகளின் உதவியோடு கொவிட் தொடர்பான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருகிறது. 

அதற்கமையவே செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7,500 உயிர்களைக் காப்பற்ற முடியும் என்றும் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10,000 உயிர்களை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை நாம் நேற்றைய தினமும் சுட்டிக்காட்டியிருந்தோம். எனவே குறிப்பிட்ட கால வரையறைக்கு நாடு முடக்கப்படுமானால் தொற்று பவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01