“கல்லூரி அதிபரை பலவந்தமாக இளைப்பாறச்செய்ய முன்னெடுத்த செயற்பாட்டை கண்டிக்கின்றோம்“

Published By: Priyatharshan

12 Sep, 2016 | 10:10 AM
image

உடுவில் மகளிர் கல்­லூ­ரியின் நிரு­வாக சபை­யி­னாலும், பேராயர் அதி வணக்­கத்­துக்­கு­ரிய கலா­நிதி டானியல் தியா­க­ரா­ஜா­வி­னாலும் கல்­லூ­ரியின் அதிபர் திரு­மதி ஷிராணி மில்­ஸினை பல­வந்­த­மாக இளைப்­பாறச் செய்யும் வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டு­களை மிகவும் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம் என்று சர்­வ­தேச நாடு­களில் இயங்கும் உடுவில் மகளிர் கல்­லூரி பழைய மாண­விகள் சங்­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

இலங்கை. ஐக்­கிய இராச்­சியம், கனடா மற்றும் அவுஸ்­ரே­லியா இருக்கும் உடுவில் மகளிர் கல்­லூ­ரியின் பழைய மாண­விகள் சங்­கங்­க­ளினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது தன்­னு­டைய சேவை­க­ளினைப் தொடர்ந்தும் பாட­சா­லைக்கு வழங்­க­வி­ரும்­பு­கிறேன் என திரு­மதி மில்ஸ் பேரா­ய­ருக்கும், நிரு­வாக சபைக்கும் அறி­வித்­தி­ருந்த போதும், அவர்கள் பாட­சா­லையின் இந்த வர­லாற்­றினைப் புறக்­க­ணித்­துள்­ளார்கள்.

திரு­மதி மில்­ஸினால் அவர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட கடி­தத்­துக்கு எந்­த­வி­த­மான பதிலும் நிரு­வா­கத்­தினால் வழங்­கப்­ப­ட­வில்லை. ஆனால் நிரு­வா­கிகள் அதிபர் பத­விக்­கான விளம்­ப­ரத்­தினை வெளி­யிட்­டனர். அதி­ப­ரினால் வழங்­கப்­பட்ட கடி­தங்­களைப் பேரா­யரும் நிரு­வா­கக்­கு­ழுவும் புறந்­தள்­ளி­ய­மை­யி­னையும், திரு­மதி மில்ஸ் மிகவும் மோச­மான முறை­யிலே அண்­மையில் நிரு­வா­கக்­கு­ழு­வினால் நடத்­தப்­பட்­ட­மையும் நிரு­வா­கக்­கு­ழு­வி­னது தீய­நோக்­கங்­க­ளி­னையே வெளிக்­காட்­டு­கின்­றன.

தன்­னு­டைய தரி­ச­ன­மிக்க தலை­மைத்­து­வத்­தி­னாலும், சுய­ந­ல­மற்ற அர்ப்­ப­ணிப்­பி­னாலும் இடை­வி­டாத கடின உழைப்­பி­னாலும் அதிபர் என்ற வகை­யிலே தனது 12 வருடப் பத­விக்­கா­லப்­ப­கு­தியில் கல்­வித்­து­றை­யிலும் சரி, விளை­யாட்டுத் துறை­யிலும் சரி, செயற்­க­லை­க­ளிலும், கட்­புலக் கலை­க­ளிலும், தக­வல் ­தொ­ழில்­நுட்­பத்­திலும் பாட­சா­லை­யினை மிகவும் உயர்ந்த சாத­னை­க­ளுக்கு திரு­மதி ஷிரா­ணிமில்ஸ் இட்­டுச்­சென்­றி­ருக்­கிறார். அவ­ரு­டைய சேவை­க­ளினை குறைந்­த­கா­லத்தில் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­கின்­றமை கல்­லூரி மாண­வி­களின் மன­நி­லையில் தாக்­கத்­தினைச் செலுத்தி இருப்­ப­துடன், பாட­சா­லையின் விழு­மி­யங்­க­ளுக்கு சேதத்­தி­னையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. பெற்­றோ­ரி­னாலும் மாண­வர்­க­ளி­னாலும் முன்­னெ­டுக்­கப்­ப­டும தொடர்ச்­சி­யான போராட்­டங்கள் இத­னை­யே­வெ­ளிக்­காட்­டு­கின்­றன.

கல்­லூ­ரியின் முகா­மைத்­து­வத்­தி­ன­ராலும், பேரா­ய­ரி­னாலும் திரு­மதி மில்­ஸினை இளைப்­பா­றச்­செய்து வேறு ஒரு­வ­ரி­னை­அ­தி­ப­ரா­க­நி­ய­மிக்­கும்­மு­னைப்­புக்­கள்­ஆ­ரம்­பித்­த­உ­ட­னே­யே­உ­ல­கம்­மு­ழு­வ­தி­லும்­உள்­ள­கல்­லூ­ரி­யின்­ப­ழை­ய­மா­ண­வி­கள்­சங்­கங்­க­ளா­கிய நாம் பாட­சா­லையின் தற்­போ­தைய அதி­பரின் பத­விக்­கா­லத்­தினை மேலும் 5 வரு­டங்­க­ளுக்­குந நீடிக்­கும்­ப­டியும், அதன்­மூ­ல­மாக‌ அவ­ரினால் தொடங்­கப்­பட்­டுள்ள பாட­சா­லை­யினை மறு­சீ­ர­மைக்கும் முயற்­சி­க­ளினை அவர் முழு­மைப்­ப­டுத்­திட முடியும் எனவும் குறிப்­பிட்டு கடி­தங்­க­ளினைப் பேரா­ய­ருக்கும் நிரு­வா­கத்­துக்கும் அனுப்­பி­வைத்தோம்.

புதிய அதி­பர்­ப­த­விக்­கான விண்­ணப்­பங்­களை ஏற்­றுக்­கொள்­ளு­வ­தற்­கான இறு­தித்­தி­னத்­துக்கு முன்­பாக இந்­தக்­க­டி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன. இந்­தக்­க­டி­தங்­க­ளுக்­கான பதி­லி­னையோ அல்­லது இந்­தக்­க­டி­தங்கள் தமக்குக் கிடைத்­துள்­ள­தா­கவோ 7 தினங்­க­ளுக்குள் கடி­தத்­தினை அனுப்­பி­ய­வர்­க­ளுக்கு அறி­விக்­கும்­படி நாம் அவர்­க­ளைக்­கேட்­டி­ருந்தோம்.

இவ்­வாறு அனுப்­பப்­பட்ட கடி­தங்­களை யாரா­வது பார்­வை­யிட விரும்பின் நாம் அவற்­றினை வழங்­கு­வ­தற்கும் தயா­ராக இருக்­கிறோம். ஜூன் மாதத்­திலே அனுப்­பப்­பட்ட இந்­தக்­க­டி­தங்­க­ளுக்கு எந்த வித­மான பதிலும் எமக்குக் கிடைக்­கா­த­மை­யினை அடுத்து பழைய மாண­வி­கள்­சங்­கங்கள் திரும்­பவும் 3 வாரங்­களின் பின்னர் கடி­தங்­களைப் பேரா­ய­ருக்கும் நிரு­வா­கத்­துக்கும் அனுப்­பி­வைத்தோம்.

அந்­தக்­க­டி­தங்கள் குறித்தும் அவை தங்­க­ளுக்குக் கிடைத்­த­தா­கவோ அல்­லது அவற்­றுக்­கான பதில்­களோ எம்மை இது­வ­ரையில் வந்­த­டை­ய­வில்லை.

கடந்த ஆகஸ்ட்­மாதம் 15 ஆம்­தி­கதி தம்­முடன் ஓர் உரை­யா­ட­லுக்கு வரும்­படி திரு­மதி மில்ஸ் பேரா­ய­ரி­னாலும் அவ­ரது பாரி­யா­ரி­னாலும் அழைக்­கப்­பட்டார். அடுத்த நாள் அவ­ரது விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் அவ­ரது 60 ஆவது பிறந்­த­தி­னத்­துக்கு ஒருநாள் முன்­பாக, செப்­டெம்பர் 6 ஆம்­தி­கதி அன்று அவர் தனது பொறுப்­புக்கள் யாவற்­றி­னையும் கைய­ளிக்­க­வேண்டும் எனவும் பாட­சா­லை­யினை விட்­டு­வெ­ளி­யே­ற­வேண்டும் எனவும் அவ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

திரு­மதி சுனீத்தா ஜெப­ரட்ணம் பாட­சா­லையின் புதிய அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி தென்­னிந்­தியத் திருச்­ச­பையின் யாழ் ஆதீ­னத்தின் இணை­யத்­த­ளத்­திலே உத்­தி­யோ­க­பூர்­வ­மான‌ அறி­வித்தல் ஒன்று வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் திரு­மதி மில்ஸின் பத­வி­நீக்கம் பற்றி எதுவும் அங்கே சொல்­லப்­பட்­டி­ருக்­க­வில்லை.

தென்­னிந்­தியத் திருச்­ச­பையின் தலை­மைத்­து­வத்தின் இவ்வாறான அடாவடித்தனமான சர்வாதிகாரத் தன்மையினையும் அவர்களுடன் இணைந்து செயற்படும் நியாயமற்ற‌ உள்ளூர் அரசியல்வாதிகளையும் நாம் முழு சமுதாயத்துக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். இந்த நிலைமை முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதுடன், அதிகாரத்திலே இருப்பவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளவேண்டும்.

திருமதி ஷிராணி மில்ஸினை வலுக்கட்டாயமாக அதிபர்பதவியில் இருந்து இளைப்பாறச் செய்தமை தவறு என்பதினை நாம் இங்கு வலியுறுத்துகிறோம். இந்த விடயத்தினை சமூகநலனுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகக் கருதிஇ பாடசாலையில் ஏற்பட்டுள்ள‌ அசாதாரண நிலையினையும் இந்த அநியாயத்துக்கு காரணமானவர்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் படி நாம் உங்கள் எல்லோரினையும் பணிவுடன் கேட்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13