புதிய களனி பாலத் திட்ட வீதியின் இரு மருங்கிலும் மரங்களை நடுமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்  ஆலோசனை

Published By: Digital Desk 4

29 Aug, 2021 | 04:15 PM
image

இலங்கையின் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும்  புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை  சுற்றியுள்ள பகுதிகளையும், புதிய களனி பாலத்தின்  முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கத்தையும் அழகுபடுத்துவதற்காக  தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளின் பரிந்துரைப்படி உகந்த  தாவர இனங்களை நடுமாறு  ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகள் நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம்  மற்றும் முருத்த ஆகியவற்றை நடுவதற்கு   முன்மொழிந்துள்ளனர். 

இவ்வாறு நடும் மரங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பை உருவாக்ககுமாறு திட்டப் பணிப்பாளருக்கு   அமைச்சர்  ஆலோசனை வழங்கியுள்ளார்.

செப்டம்பர் இறுதிக்குள் பொதுமக்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய களனி பாலம் திட்டத்தின்  நிலப்பகுதியை அழகுபடுத்துவது  தொடர்பில் Zoom தொழில்நுட்பம்  ஊடாக நடைபெற்ற  கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர்.பிரேமசிரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சமிந்த அதலுவகே,திட்டப் பணிப்பாளர் தர்சிக்கா ஜயசேகர உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58