திசை திருப்பும் உத்தியா?

Published By: Digital Desk 2

29 Aug, 2021 | 02:11 PM
image

என்.கண்ணன்

“ பொருளாதாரம் படுகுழியில் கிடக்கின்ற நிலையில், மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டால், அதனை தாங்க முடியாத நிலைஏற்படும் என்று மிரண்டு போயிருக்கும்  அரசாங்கம் அவ்வாறான கிளர்ச்சிக்கு வெளிநாடுகள் தூபம் போடுமோ அச்சத்தினையும் கொண்டிருக்கின்றது”

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் மீண்டும் முரண்பாடுகள்தோன்றியிருக்கின்றன.

உடனடியாகப் பொது முடக்கத்தை அறிவிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 10 சிறிய பங்காளிக் கட்சிகள் கூட்டாக விடுத்த அழைப்பு, ஆளும் பொதுஜன பெரமுனவுக்கு கடும் அதிருப்தியைஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கம்போலவே, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமே, இதனை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதற்குப் பின்னர் காமினி லொக்குகே போன்றவர்களும். பங்காளிக் கட்சிகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.

இவர்களின் இந்த அதிருப்தி அல்லது விமர்சனங்களில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

ஒன்று, வெளிநாட்டுச் சக்திகளின் சதி பற்றியது.

இன்னொன்று, அமைச்சரவைக்குள் எந்தக்கருத்தையும் வெளியிடாமல் இணங்கி விட்டு, வெளியே வந்து அறிக்கை வெளியிடுவது.

கொரோனா தொற்று உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த போதும், அதனை தடுப்பதற்காக இருக்கின்ற ஒரே வழி நாட்டை முடக்குவது தான் என்ற நிலையில் கூட, அதனைப் பரிசீலிக்கும் நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை.

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்ததே தவிர, சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளையோ, பரிந்துரைகளையோ கவனத்தில் கொள்ளவில்லை.

பொருளாதார ரீதியாக நாடு சீரழிந்து போய் விட்டால், ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று அரசாங்கம் அச்சம் கொண்டிருந்தது.

அதனால், சுகாதார தரப்பின் கருத்துக்களை புறக்கணித்தது.

அமைச்சரவைக் கூட்டங்களில் பொருளாதார ரீதியான காரணங்களை முன்வைத்தே, நாட்டை முடக்குவதில்லை என்ற முடிவுகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-29#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04