சத்ரியன்
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குச்சென்றனர் என்றால், அதற்கு மரபு சாரா வழிகள் இருந்தன என்றால், அதற்கு பதவியில் உள்ள தற்போதைய ஜனாதிபதி தான் பொறுப்புக்கூற வேண்டும். ஏனென்றால் அப்போது அவர் தான் பாதுகாப்புச் செயலாளர்”
வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக, தினேஷ் குணவர்த்தன கொழும்பின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அந்த குறுகிய செவ்வியில் அவர், காணாமல் போனவர்கள் என்று கூறப்படுகின்ற பலர், இப்போது வெளிநாடுகளில் வேறுபெயர்களுடன் வாழுகின்றனர் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இவர்கள் போரின் இறுதிக்கட்டத்தில், மரபுசாரா வழிகளின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கிறார்கள் என்றும், ஆனால் அவர்கள் காணாமல் போனவர்களாக பட்டியல்களில் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறான நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கூறியிருந்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எல்லா நாடுகளும் அவ்வாறானவர்களின் தரவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் தற்போது, வெளிநாடுகளின்வாழுகின்றனர் என அரசாங்கம் கூறிவருகின்ற தகவல்கள் புதியதல்ல.
ஒரு குற்றச்சாட்டை நேரடியாக மறுப்பது ஒரு வகை. அந்தக் குற்றச்சாட்டை பொய் என நிரூபிப்பது இன்னொரு வகை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-29#page-4
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM