(எம்.மனோசித்ரா)

விசேட அதிரடிப்படையினரினால் கிராண்ட்பாஸ் மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 87,750 பணம் என்பவற்றுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட அதிரடிப்படையினரினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் தொடலங்க பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில்  277 கிராம் ஹெரோயினுடன் 41 மற்றும் 37 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவில் மாகொல வடக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 87,750 ரூபா பணம் என்பவற்றுடன் 42 வயதுடைய பெண்னொருவரும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.