ஆப்கான் தேசத்தில் ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போராட்டம்

By Digital Desk 2

29 Aug, 2021 | 02:06 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

கடந்த வியாழக்கிழமைமாலை. தலிபான் இயக்கம் மீளவும் கைப்பற்றிய காபூல் விமான நிலையம் பரப்பாக இருந்தது. ஆப்கானிஸ்தானில்இருந்து வெளியேறும் படைவீரர்கள் நுழைவாயிலுக்கு அருகே நிற்கிறார்கள். கூடவே மொழி பெயர்ப்பாளர்கள்,அமெரிக்கப் படைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள், ஆயுதமேந்தி நிலைமையை கண்காணிக்கும்தலிபான்கள் ஆகியோரும் உள்ளனர். 

சோதனைச் சாவடிகளைத்தாண்டிச் செல்லும் நபர் குழுவை நெருங்கிறார். தமது உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகளைவெடிக்கச் செய்கிறார். அவ்விடம் அல்லோலகல்லோலமாகியது.

அதிலிருந்து சற்றுதூரத்தில் அமைந்திருந்தது ஹோட்டல். அது ஆப்கானிஸ்தானில்; இருந்து வெளியேறும் அமெரிக்க,பிரிட்டன் படைகள் ஒன்றுகூடும் இடம். அங்கேயும் குண்டொன்று வெடிக்கிறது. தொடர்ந்து,அமெரிக்கப் படைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது

ஆப்கானின் ஆட்சிநிலைமாற்றத்தை ஒட்டுமொத்த உலகும் கவனித்துக் கொண்டிருந்த தருணத்தில் இந்த இரட்டைத்தாக்குதல்களும் நிகழ்ந்திருந்தன. ஆப்கான் பிரஜைகள், அமெரிக்கப் படையினர் மாத்திரமன்றி,தலிபான் அங்கத்தவர்களும் பலியாகின்றனர்.

இந்தத் தாக்குதல்களைதாமே நடத்தியதாக ஆயுதக்குழுவொன்று கூறுகிறது. ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்.கொராஸான் மாநில இஸ்லாமிய இராஜ்ஜியம் (ஐளுமுP) என்பது அதன் பெயர்.

ஐ.எஸ் இயக்கத்தின்உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான அமாக், இவர் தான் தாக்குதலை நடத்தினார் என்று பெயரையும்,படமொன்றையும் வெளியிடுகிறது. அவர் அமெரிக்கப் படைகளையே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகமேலும் கூறப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-29#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right