லோகன் பரமசாமி

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலையானகொள்கை அர்பணிப்பை வலியுறுத்தும் வகையிலான பயணமொன்றை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலாஹரிஸ் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார்.சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இவரதுபயணம் திட்டமிடப்பட்டு இருந்தது.

சீனாவின்பிராந்திய விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் தென்கிழக்காசிய நாடுகளுடனானஉறவுகளை வலுப்படுத்தும் கொள்கைத் தீர்மானங்களை எடுத்துக் கூறும் இந்த பயணத்தின்போது ஆப்கனிஸ்தானில் தலிபான்களின் திடீர் நகர்வுகள் குறித்தும்விளக்கமளிப்பதும் திட்டமாக இருந்தது. 

தற்போது,ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் அவசர வெளியேற்றம் போலவே1975ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம்வியட்கொங் படைகளின் நடவடிக்கைகள் காரணமாக  சுமார்முப்பதாயிரம் வியட்நாமியர்களை அமெரிக்க நிர்வாகத்திற்கு சார்பாக செயற்பட்ட காரணத்தால்சாய்கன் நகரிலிருந்து  அவசரஅவசரமாக  வெளியேற்றமுற்பட்டன.

‘சர்வதேசவல்லரசு’ என்ற பெயரை அமெரிக்காஇழந்து விட்டது என்று அன்றையசோவியத் ஆதரவு கொண்ட அணிசேராநாடுகள் சுட்டிகாட்டி இருந்தன. தற்போது மீண்டும் அதேபோலவேகாபூலில் இருந்து அமெரிக்கா தலைமையிலானநேட்டே படைகளின் வெளியேறல் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானில்திடீரென தலிபான்களின் மேற்கொண்ட பாரிய நகர்வு அமெரிக்கப்படைகள்மீதான வெற்றியை மையமாகக் கொண்டது. அமெரிக்க சார்பு  காபூல்நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களை பயப்பீதிக்குள் தள்ளி விட்டது. இதனைதொடர்ந்து எழுந்த நிகழ்வுகளாக சட்டஒழுங்கு, சீர்குலைவுகள் மேலும் பல்லாயிரக்கணக்கானவர்களை  நாட்டைவிட்டுவெளியேற வைக்கும் சிந்தனைக்குள் தள்ளிவிட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-29#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.