(ஆர்.ராம்)
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளமையால் ஏற்படும் விளைவுகளை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லை என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாட்டை முழுமையாக முடக்கியுள்ளதால் நாளொன்றுக்கு 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு பின்னரும் நாட்டில் முடக்கநிலைமைகள் தொடருமாயின் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்றும் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் நாட்டை குறுகிய காலத்தினுள் மீளத் திறக்க வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்களுடனான கலந்தாய்விலும் அவ்விதமான நிலைப்பாடே வெளிப்படுத்தப்பட்டிருப்பாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும் நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொரோனா ஒழிப்பு செயலணியானியின் தீர்மானத்திற்கு அமைவாகரூபவ் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீரகேசரிக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை முழுமையாக அமுலாக்குவதால் ஒட்டுமொத்தமாக எமது உற்பதிகள் பாதிப்படைகின்றன. இதனால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி குறைவடைவதால் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வெகுவான தாக்கத்தினை செலுத்துகின்றது.
பொருளாதார நிபுணர்களுடனான கலந்துரையாடல்களின் பிரகாரம்ரூபவ் நாட்டை முடக்குவதால் பொருளாதார நிலைமைகள் மோசமடையும் நிலைமையே அதிகமாக உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று 15 பில்லியன் ரூபா நாளொன்றுக்கு நட்டம் ஏற்படுகின்றது.
தற்போது மேலும் ஒருவாரத்திற்கு நாடு முடக்கப்பட்டுள்ளது. இதனால் நட்டத்தொகை அதிகரிக்கின்றது. இதனை ஈடுசெய்வதற்கு எவ்விதமான வழிகளும் இல்லை. இது இழக்கப்படும் தொகையாகவே நீடிக்கப்போகின்றது.
அதுமட்டுமன்றி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முடக்கல் நிலை நீடிப்பினால், நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசியினர் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாத சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர்.
4.5 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரக்திக்குள்ளாகும் நிலைமைகள் தோற்றம்பெறுகின்றன. மைக்ரோ துறையில் சுமூகமற்ற நிலைமைகள் ஏற்படுவதோடு அதனை சமரசப்படுத்துவதற்கு தீவிரமாகச் செயற்பட வேண்டிய சூழல் உருவாகின்றது.
இதனைவிடவும், ஒட்டுமொத்தமாக நாட்டின் நீண்டகாலப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்கரளை இம்முடக்கம் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது போகும் சூழல் உருவாகியுள்ளது.
ஆகவே கடுமையான சுகாதார விதிமுறைகளை அமுலாக்குவதோடு நாட்டை மீளவும் திறந்து இயங்குநிலைக்கு கொண்டுவர வேண்டியது கட்டாயமாகின்றது.
மேலும் நாட்டிற்கு கடன் நெருக்கடிகள் இருக்கின்றன. குறிப்பாக, நாட்டின் 2020, 2021ரூபவ்2022 ஆம் ஆண்டுகளுக்கான மொத்தக் கடனும் வட்டியுமாக 6188 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
இதுவரை காலமும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் அரசாங்கம் வெளிநாட்டுக்கடன்களை செலுத்தியே வந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போதும் அதற்கான கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக, நாட்டில் தேவையான வளங்கள் உள்ளன. உபயோகப்படுத்தப்படாத வளங்களைப் பயன்படுத்துவதன் ஊடாக நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முடியும். அதற்கான திட்டங்களையும் நாம் வகுத்திருக்கின்றோம். ஆகவே அத்திட்டங்கள் முறையாக நடைபெறுமாயின் நிச்சயமாக ஆகக் குறைந்தபட்சம் 400 மில்லியன் டொலர்களை ஈட்ட முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் தற்போதைய முடக்கமானது, அனைத்து விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. ஆகவே இதனால் சில பின்னடைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி நிலைமைகள் அடுத்து வரும் காலத்தில் ஏற்படலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM