இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
கடந்த வருடம் தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் சாதனை செய்தது.
கொரோனா சூழலில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ற பெருமையும் ’மாஸ்டர்’ படத்திற்கு கிடைத்தது.
இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல், படம் வெளியாவதற்கு முன்பே வைரலானது. இதனால், ரசிகர்கள் பாடலைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். படம் வெளியான பிறகு, படக்குழுவினர் கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் ‘வாத்தி கம்மிங்’ வீடியோ பாடலை வெளியிட்டனர்.
படம் வெளியானதிலிருந்து இப்போதுவரை உலகம் முழுக்க ரசிகர்களும் பிரபலங்களும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, இப்பாடல் ஹிட்டாலேயே அனிருத் விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமைப்பாளராக தெலுங்கில் அறிமுகமாகிறார் என்று சினிமா விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில், ’வாத்தி கம்மிங்’ பாடல் வெளியான 7 மாதத்திலேயே யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அத்தோடு, இரண்டரை மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM