ஐக்கிய நாடுகள் சபையின் 33 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் கயந்த கருணாதிலக உட்பட விசேட தூதுக் குழுவொன்று அமெரிக்கா செல்கிறது.

இந்த விஜயத்தின்போது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும்   பல்வேறு உறுப்பு நாடுகளின்   தலைவர்மாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.  

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இதன்போது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவையென ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.