கொள்ளுப்பிட்டியிலுள்ள நகை விற்பனை நிலையத்தில் நேற்று கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரு பாகிஸ்தானியரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று இரவு நடைக்கடைக்குச் சென்று சுமார் ஒரு கோடி 10 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் இரத்தினக் கற்களையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய  விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

இந்நிலையில் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதோடு கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள், இரத்தினக் கற்கள் மற்றும் 3650 அமெரிக்க டொலர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்விருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.