சீனியின் விற்பனை விலையை கட்டுப்படுத்துவது கடினம் - அமைச்சர் பந்துல

Published By: Digital Desk 3

28 Aug, 2021 | 07:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் சீனியின் விற்பனை விலையை கட்டுப்படுத்துவது கடினமானது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண சீனி இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட போது நாட்டில் 90,000 மெற்றிக் தொன்  சீனி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில்  கடந்த வாரம் 115 ரூபாய் தொடக்கம் 130 ரூபா வரையில் காணப்பட்ட சீனியின் விற்பனை விலை தற்போது 210  தொடக்கம் 220 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

105 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய  ஒரு கிலோ சீனியே தற்போது 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. சீனியின் விற்பனை விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

துறைமுகத்தில்  தேங்கியுள்ள சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22