எம்.எம்.சில்வெஸ்டர்
டோக்கியோ பராலிம்பிக்கில் இன்றைய தினம் நடைபெற்ற ஆண்களுக்கான பி.ஆர்.ஐ. பிரிவில் ரிபிச்சேன்ஞ் சுற்றில் பங்கேற்ற பிரியமல் மகேஷ் ஜயகொடி 11 நிமிடங்கள் 21.31 செக்கன்களில் நிறைவு செய்து கடைசி இடமான ஐந்தாவது இடத்தைப் பிடித்து நிரல்படுத்தலுக்கான இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.
பிரியமல் ஜயகொடி பங்கேற்கும் இந்தப் போட்டி தரவரிசைக்கான போட்டியாக மாத்திரமே அமையுமே தவிர, பதக்கத்துக்கான போட்டியாக அமையாது. இப்போட்டி நாளைய தினம் இலங்கை நேரப்படி காலை 7.10 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்நிலையில், இந்தப் போட்டி நிகழ்வின் பதக்கத்துக்கான இறுதிப் போட்டி நாளை தினம் காலை 8.40 மணிக்கு இடம்பெறும். இந்த இறுதிப்போட்டியில் உக்ரைனின் ரோமன் பொலியன்ஸ்கி, பிரேஸிலின் கெம்பொஸ் பெரெய்ரா, இஸ்ரேலின் டேனியல் ஷ்முஹெல், ஸ்பெய்னின் முனோஸ் ஜேவியர், அவுஸ்திரேலியாவின் ஹொரி எரிக், பிரித்தானியாவின் பெஞ்சமின் பிரிச்சார்ட் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
இவர்களில் உக்ரைனின் ரோமன் மற்றும் கெம்பொஸ் இருவரில் ஒருவர் தங்கப் பதக்கத்தை வெல்லக்கூடும் என கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM