கொழும்பில் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றடைந்து வேகமாக பரவுகின்றது - ஆய்வில் புதிய தகவல்

Published By: Digital Desk 2

28 Aug, 2021 | 02:14 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டில் இனங்காணப்பட்ட டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொரு மரபணு திரிபும் படிப்படியாக பிரதான திரிபாக மாறிக் கொண்டிருப்பது இனங்காணப்பட்டது. 

மிகக்குறுகிய காலத்திற்குள் அசல் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றமடைந்து விரைவாக பரவி வருகின்றமையும் இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

டெல்டா திரிபு தொடர்பான புதிய அறிக்கையின் படி ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் டெல்டா திரிபானது கொழும்பை அடிப்படையாகக் கொண்டு வேகமாக பரவலடைந்துள்ளது.

அதற்கமைய கொழும்பில் 100 வீதம் டெல்டா பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

கடந்த வாரம் நாட்டில் டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் இனங்காணப்பட்டிருந்தன. இவை தொடர்பில் தொடர் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வின் முடிவு தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கு எமக்கு நாடளாவிய ரீதியிலிருந்து மாதிரிகள் கிடைக்கப் பெறும். இவ்வாறு மாதிரிகள் கிடைக்கப் பெற்றவுடன் பி.சி.ஆர். பரிசோதனை வழமையைப் போன்று மேற்கொள்ளப்படும்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களில் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் போது மரபணு திரிபுகளை இனங்காண்பதற்கு பிரத்தியேக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட அல்பா திரிபு , இந்தியாவில் இனங்காணப்பட்ட டெல்டா திரிபு உள்ளிட்டவற்றுக்கு உரித்தான மாறுபாடுகள் உள்ளன.

அந்த மாறுபாடுகளை கண்டறிவதற்காகவே மேற்கூறப்பட்ட பிரத்தியேக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் போது கிடைக்கப் பெறும் அறிக்கைக்கு அமையவே தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26