நடிகர் விமல் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'வெற்றி கொண்டான்' என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'வெற்றி கொண்டான்'.

இதில் நடிகர் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிஷா நரங் என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர் சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

ராமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை ஒடியன் டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. அண்ணாதுரை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

'வெற்றி கொண்டான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விமலின் எக்சன் அவதாரம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால், ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.