சீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்தன.

அந்தவகையில் இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

Image

அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

அதற்கமைய இம்மாத்தில் 18 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இதுவரையில் 9 665 009 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் முதற்கட்டமாகவும் , 4 863 109 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன. 

இதேபோன்று கொவிஷீல்ட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக 1 353 936 பேருக்கும் , 881 738 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் 159 088 பேருக்கு முதற்கட்டமாகவும் , 25 489 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளதோடு , பைசர் தடுப்பூசிகள் 305 639 பேருக்கு முற்கட்டமாகவும் 150 001 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மொடர்னா தடுப்பூசிகள் 771 449 பேருக்கு முதற்கட்டமாகவும் 543 959 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை காலை வரை 12 255 121 பேருக்கு முதற்கட்டமாகவும் , 6 464 296 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.