(எம்.எப்.எம்.பஸீர்)

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மாமனார் சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். 

இந் நிலையில், அதனை அடிப்படையாக கொண்டு, அவரை எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணையளிக்குமாறு, நகர்த்தல் பத்திரம் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரனி அனுஜ பிரேமரத்ன முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

எனினும் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பின் உடனடியாக அவசியமான சிகிச்சைகளை அவருக்கு வழங்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தர்விட்டார்.