மட்டக்களப்பு சந்திவெளியையும் திகிலிவெட்டையையும் இணைக்கும் ஆற்றை கடந்து வயலுக்கு சென்று வீடு திரும்பியபோது பாதையில் இருந்து தவறி ஆற்றில் வீழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) பிற்பகலில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சித்தாண்டி 2 ஆம் பிரிவைச் சோந்த 45 வயதுடைய பாக்கியராசா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழமை போல் குறித்த ஆற்றை சந்திவெளியிலுள்ள பாதையின் ஊடாக கடந்து திகிலிவெட்டை பிரதேசத்திலுள்ள வயலுக்கு சம்பவதினமான இன்று காலை சென்று அங்கிருந்து சுமார் 4 மணிக்கு பாதையூடாக வீட்டிற்கு செல்வதற்காக கடந்தபோது வலிப்பு ஏற்பட்டதையடுத்து பாதையில் இருந்து தவறி ஆற்றில் விழுந்ததையடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM