பதுளை, மொனராகலையில் 838 கொரோனா தொற்றாளர்கள் - 14 மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

27 Aug, 2021 | 04:43 PM
image

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்தில் 27.8.2021 இன்றுடன் 838 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 14பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்கு 140 மில்லியன் நிதி ஒதுக்கீடு - Newsfirst

ஊவா மாகாண சுகாதர சேவை பணியகத்தினால் வெளியிடப்பட்ட கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் குறித்த விபரப்பட்டியலில் மேற்கண்ட விபரம் குறிப்பிடப்பட்டுள்ளன. 

பதுளை மாவட்டத்தில் 495 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 343 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை 83 பேர் , பண்டாரவளை 35 பேர், எல்ல 37பேர், கிரார்துருகோட்டை 07 பேர், ஹல்துமுள்ளை – 51 பேர், ஹாலிஎல – 07பேர், ஹப்புத்தளை -56பேர், கந்தகெட்டிய -06பேர், லுணுகலை -09பேர், மகியங்கனை -13பேர், மிகாகிவுல – 03பேர், பசறை -22பேர், ரிதிமாளியத்த – 94பேர் , சொரணதொட்டை 09 பேர், ஊவா- பரனகம – 43பேர், வெலிமட -20பேர் என்றவகையில் 495 பேர் கொரேனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

இவர்களில் பதுளை, எல்ல, கிராந்துருகோட்டை, ஹல்துமுள்ளை, ஹாலிஎல, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் ஆறுபேரும், வெலிமடையில் இருவருமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை -66 பேர், சியாம்பலாண்டுவை-41பேர். மடுல்ல -12பேர், மெத்கம -42பேர் பிபில -17பேர். படல்கும்பரை -21பேர், புத்தலை – 42பேர், வெள்ளவாய- 64பேர், தனமல்வில -05பேர், செவனகல – 15பேர், கதிர்காமம் - 18பேர், என்றவகையில் 343 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாகவுள்ளனர்;. இவர்களில் பிபிலையில் ஒருவரும், படல்கும்பரையில் இருவரும், வெள்ளவாயாவில் மூவருமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹப்புத்தளையில் அடையானம் காணப்பட்ட கோவிட்19 தொற்றாளர்கள் 56பேரில் 16 வயதுகளுக்குற்பட்ட 11 சிறார்களும் உள்ளடங்கியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:24:09
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34