'மக்கள் செல்வன்' நடிகர் விஜயசேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அனபெல் சேதுபதி'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை டாப்சி நடித்திருக்கிறார். 

இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், மதுமிதா, சுப்பு பஞ்சு , தேவதர்ஷினி தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் படத்தொகுப்பாளர் கலை இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அடுத்த மாதம் 17ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே விஜய் சேதுபதியின் நடிப்பில் தயாராகும் தயாரான இரண்டு படங்கள் அடுத்த மாதத்தில் வெளியாகிறது என்பதும், 'அனபெல் சுப்பிரமணியம்' என்ற பெயரில் உருவான இந்த திரைப்படம், திரையுலக வணிகர்களின் அழுத்தம் காரணமாக ' அனபெல் சேதுபதி' என பெயர் மாற்றம் பெற்று வெளியிடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.