நீர்கொழும்பு கட்டான பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது 19 ஆது  பிறந்தநாள நேற்று  கொவிட் சிகிச்சையாக 10  இலட்சம் ரூபாவை  நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நீர்கொழும்பு கட்டான வெலிஹேனா பகுதியைச் சேர்ந்த ட்ரெவன் சில்வாபுள்ளே இளைஞரான நேற்று அவரது 19 ஆவது பிற்நதநாளையொட்டி 10  இலட்சம் ரூபாவை பெறுமதியான மருத்துவ உபகரணங்களை தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவிடம் கையளித்துள்ளார்.

 

இந்நிலையில், ட்ரெவனினால் இரண்டு மல்டிபரா மானிட்டர்கள் மற்றும் ஐந்து நெபுலைசர்கள் உட்பட 10  இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை தனிப்பட்ட முறையில் நன்கொடையாக வழங்கினார்.

இவர் முழு நாட்டிற்கும் ஒரு முன்னுதாரணம் என  தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும், இளைஞர்கள் தங்கள் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டின் துயரமடைந்த நோயாளிகளை கவனிப்பதற்காக இத்தகைய நன்கொடை அளித்ததற்காக தனது நன்றியை தெரிவித்துள்ளார்..

இந்த நன்கொடை துயரத்தில் உள்ள நோயாளிகளை பராமரிக்க பயன்படும். அமைச்சரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.