(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான தசுன் ஷானக்க தனக்கு கிடைத்த தொடர் நாயகனுக்குரிய பரிசுத் ‍தொகையான 2 இலட்சம் ரூபாவை களுபோவில போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்விடேஷனல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 

இப்போட்டியில் தசுன் தலைமையிலான கிறேஸ் அணி சம்பியனானது. 

இப்போட்டித் தொடரில் சகல துறைகளிலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு துணை நின்ற தசுன் ஷானக்கவுக்கு ‍தொடர் நாயகனுக்குரிய கிண்ணத்துடன்,  2 இலட்சம் ரூபா பணப்பரிசும் கிடைத்திருந்தது. 

இந்நநிலையில், கொரோனா பாதிப்பால் நாட்டில் பல்வேறு வைத்தியசாலைகளிலும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையிலேயே தனக்கு கிடைத்த 2 இலட்சம் ரூபா பணப்பரிசை களுபோவில போதனா வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கினார்.

இப்போட்டித் தொடரில் இவர் 258 ஓட்டங்களை குவித்ததுடன், 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.