பொகவந்தலாவ நகரத்தில் உள்ள மதுபான சாலையின் முகாமையாளா் ஒருவா் பலத்த வெட்டு காயங்ளுடன் பொகவந்நதலாவ வைத்தியசாலையில் இருந்து நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவையில் உள்ள மதுபான சாலையில். மது அருந்தி கொண்டிருந்த நபருக்கும் மதுபானசாலையின் முகாமையாளருக்கும் ஏற்பட்ட வாய்தகா்க்கம் மோதலாக மாறி குறித்த முகாமையாளரை கத்தி வெட்டியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த முகாமையாருக்கு கழுத்து பகுதியிலும் வலது கையிலும் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

காயங்களுக்கு உள்ளான முகாமையாளா் பதுளை பகுதியை சோ்ந்தவரெனவும் முகாமையாளரை வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பில் கைது செய்யபட்ட சந்தேக நபா் நாளை அட்டன் நீதவான் முன்னிலையில் அஐா்படுத்த படஉள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு பலத்த காயங்களுக்கு உள்ளான முகாமையாளா் தேவராஐ் எனவும் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.