கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தில் உள்ள பல விடுதிகள் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் எவ்வித ஏற்பாடுகளுமின்றி நோயாளிகள் பராமரிப்பு சேவைகளுக்காக நேற்று (26) காலை திறக்கப்பட்டது.

May be an image of text that says 'ಕ BEKR දකුණු කොළඹ ශික්ෂණ රෝහල கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை Colombo South Teaching Hospital'

நீண்ட காலமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அறிவுறுத்தினார். 

அதன்படி ஒரு மாதத்திற்குள் அதன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு, எந்தவொரு உத்தியோகபூர்வ விழா அல்லது திறப்பு நிகழ்வுகள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தினார்.

எட்டு மாடிக் கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு, பல விடுதிகள், 6 அறுவை சிகிச்சை நிலையங்கள், இருதய சிகிச்சை பிரிவு மற்றும் பல ஆய்வகங்கள் உள்ளடங்கியுள்ளன.

இந்த கட்டிடத்தில் சிகிச்சை சேவைகளை ஆரம்பிக்கும் போது, கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.

தற்போது இந்த வைத்தியசாலையில் சுமார் 200 படுக்கைகள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திறனை எதிர்காலத்தில் 350 க்கும் அதிகமாக அதிகரிக்கவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

May be an image of sky

May be an image of hospital and indoor