ஆப்கான் தாய்க்கு அமெரிக்க விமானத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் ‘ரீச்’ - இது தான் காணரம்

26 Aug, 2021 | 08:24 PM
image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து சென்ற அமெரிக்க இராணுவ விமானத்தில், நிறைமாத கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு "ரீச்" (Reach) என பெயரிடப்பட்டுள்ளது.

ஆப்கானிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பிறந்த பெண்குழந்தைக்கு விமானத்தின் அழைப்பு சமிக்ஞையான ரீச் என்பதையே பெற்றோர் பெயராக சூட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானின் காபூல் விமானநிலையத்திலிருந்து பொதுமக்களை ஏற்றிச் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பிணியொருவர் விமானத்திலேயே பெண்குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த விமானத்தின் அழைப்பு சமிக்ஞை ரீச் 828 என்பதாகும். இந்நிலையில், குழந்தையின் பெற்றோர் இதன் காரணமாக தங்களின் குழந்தைக்கு ரீச் என பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.

ஆப்கானிலிருந்து பொதுமக்களை விமானம் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையின் போது மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.  இந்த குழந்தை மாத்திரம் விமானத்தில் பிறந்துள்ளது ஏனைய இரண்டு குழந்தைகளும் வைத்தியசாலையில் பிறந்துள்ளன.

மத்திய கிழக்கிலிருந்து விமானம் புறப்பட்டவேளை குறித்த தாய் பிரசவவலியால் துடித்துள்ளார், புத்திசாலித்தனமாக செயற்பட்ட விமானி விமானத்தை தாழ்வாக பறக்கச் செய்து தாயின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

குழந்தை அமெரிக்க விமானத்தில் பிறந்தபோதிலும் பெண்குழந்தைக்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

இந்நிலையில், அமெரிக்க விமானப்படையின் விமானி என்ற அடிப்படையில் ரீச் என அழைக்கப்படும் குழந்தை அமெரிக்க பிரஜையாக வளர்ந்து எங்கள் வான் வெளியில் எங்கள் போர்விமானங்களை செலுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பெண்குழந்தைக்கு ரீச் என பெயரிட்டனர், அவர்களை கட்டாரிலிருந்து ஜேர்மனியின் ரம்ஸ்டெய்ன் விமானதளத்திற்கு அழைத்துவந்த விமானத்தின் அழைப்பு சமிக்ஞை ரீச் என்பதால் அவர்கள் தங்கள் குழந்தைக்கு அந்த பெயரை சூட்டினார்கள் என  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52