எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது வெறுக்கத்தக்கது - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 3

26 Aug, 2021 | 04:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் நாட்டை பலவீனப்படுத்துவதற்காகவே எதிர் தரப்பினர் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துமாறு வலியுறுத்துகிறார்கள்.

பூகோள மட்டத்தில் எழுந்துள்ள பெருந்தொற்று சவாலை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள வேளை  எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு  செயற்படுவது வெறுக்கத்தக்கது என  துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டை தொடர்ந்து முடக்குவதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள். கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக நிதி  செலவிடப்படுகிறது.  வருமானம் ஈட்டும் வழிமுறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே பூகோள மட்டத்திலான பெருந்தொற்று சவாலை அரசாங்கம் எதிர்க் கொண்டுள்ள நிலையில் எதிர்தரப்பினரும், அவர்களுக்கு சார்பான தொழிற்சங்கத்தினரும் குறுகிய நோக்கத்திற்காக செயற்படுவது வெறுக்கத்தக்கது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி இலங்கை வருகை...

2026-04-12 09:11:53
news-image

ஈரானிய படையினரை மீண்டும் தாயகம் அனுப்ப...

2026-04-12 09:11:36
news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

ரஷ்யாவிடம் இருந்து நேரடி எரிபொருள் கொள்வனவு...

2026-04-12 09:05:24
news-image

இலங்கையில் மீண்டும் ஒரு மின்வெட்டு அச்சம்

2026-04-12 09:04:32
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

சீனாவின் திட்டத்தால் தெற்காசிய பொருளாதாரத்தில் பெரும்...

2026-04-12 09:03:28
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 09:00:35
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51