(எம்.மனோசித்ரா)
தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதி நிர்மானப்பணிகளின் காரணமாக காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 21 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து பாணந்துறை வரையிலான 17 கி.மீ வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ள தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதிக்காக 38 பில்லியன் ரூபா செலவிடப்படும்.
இந்த வீதியை நிர்மாணிப்பதன் காரணமாக காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க 21 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர பாதையின் ஆறு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது.
இராமகிருஷ்ண வீதியில் இருந்து மெல்பெர்ன் அவென்யூ வரை, மெல்பெர்ன் அவென்யூவில் இருந்து கிளென் எபெர் பிளேஸ் வரையும் , க்ளென் எபெர் பிளேஸ் முதல் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் வரை, இராமகிருஷ்ண வீதியில் இருந்து பேஸர் அவென்யூ வரை , கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் முதல் ரன்முத்து ஹோட்டல் வரை மற்றும் பேசர் அவென்யூவில் இருந்து தெஹிவளை ரயில் நிலையம் வரை தற்பொழுது நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM