(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் வீரரான சீக்குகே பிரசன்ன, நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர்  லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்மூலம், ஒப்பந்தம் செய்யப்பட்ட தினேஷ் சந்திமால் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும், சீக்குகே பிரசன்ன சித்வான் டைகர்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர். 

4 ஆவது அத்தியாயமாக நடைபெறும் எவரெஸ்ட் தொடரில் நடப்புச் சம்பியனான லலித்பூர் பெட்ரியொட்ஸ், ‍பைரவா கிளேடியேட்டர்ஸ், பிரட்நகர் வோரியர்ஸ், சித்வான் டைகர்ஸ், கத்மன்டு கிங்ஸ் லெவன், பொகஹரா ரைனோஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடர்  செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.