வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (25.08) குறித்த பெண் உயிரிழந்துள்ளார்

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.