தான்சானியாவில் ஏற்பட்ட  பூமியதிர்ச்சியில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு தான்சானியாவில் ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டராக பதிவாகியுள்ளது.

குறித்த பூமியதிர்ச்சியினால் 200 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

காயம் அடைந்த 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறித்த பூமியதிர்ச்சியனது ருவாண்டா, உகாண்டா மற்றும் கென்யாவிலும் உணரப்பட்டது என்று அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.