புற்றுநோயாளர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது

By T Yuwaraj

25 Aug, 2021 | 09:53 PM
image

(எம்.மனோசித்ரா)

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையைக் அடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

எனவே புற்றுநோயாளர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானதாகும் என்று புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சச்சினி ரத்நாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையைக் அடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டமையால் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்களுக்கு மீண்டுமொரு நோய் நிலைமை ஏற்படும் போது அதனை எதிர்த்து போராடுவது கடினமாகும்.

எனவே புற்று நோயாளர்கள் தமது புற்று நோய்க்கான மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அதே போன்று புற்று நோயிலிருந்து குணமடைந்து மருந்துகளை பாவித்துக் கொண்டிருப்பவர்கள் வைத்தியர்களின ஆலோசனைகளையும் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத்தோடு இவ்வாறானவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வெளியிடங்களுக்கு செல்லாமல் அதே பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லை எனில் பிரதேசத்திலுள்ள கொவிட் சிகிச்சை நிலையத்தில் தம்மை பதிவு செய்து நடமாடும் சேவை ஊடாகவேனும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52