(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், மெகசின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை நீதிமன்றில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிமன்றில் ஆஜரானார்..! | Virakesari.lk

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகரின் பரிந்துரைக்கு அமைய, சிறைச்சாலைகள் நீதிமன்றம் ஒன்றினை அமைத்து விசாரணையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, வைத்தியரை அச்சுறுத்தியமை தொடர்பான விடயத்தை சிறைச்சாலைகள் நீதிமன்றம் ஒன்றின் முன் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.

இந்த சிறைச்சாலைகள் நீதிமன்றமானது நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கீழ் ஏற்படுத்தப்படுவதுடன் அந்த குழு முன்னிலையில் அது குறித்த விசாரணைகள் நடாத்தப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.