திருகோணமலை, நிலாவெளி  கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபரகரணங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காக குறித்த நபர்களை குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.