எலும்பு மஜ்ஜையில் இரத்தத்தை உருவாக்கும் செல்கள் உற்பத்தியாகின்றன. இங்கு உற்பத்தியாகும் செல்கள், சிவப்பணு, வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் ஆக மாற்றம் பெறுகிறது.

இந்நிலையில் எலும்பு மஜ்ஜையில் உருவாகும் சில செல்கள், அசாதாரணமான நிலையில் உற்பத்தியாகி, எந்தவித மாற்றமும் பெறாமல் அங்கேயே இறந்துவிடுகிறது. 

இத்தகைய பாதிப்பின் போது சிலருக்கு மைலோடிப்ளாஸ்டிக் சின்ட்றோம் எனப்படும் அரிய வகையினதான புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சையை வழங்க இயலும் என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

இது ஆண் பெண் என இருபாலாருக்கும் எந்த வயதில் ஏற்படக்கூடும். புகைப்பிடிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறு அதிகம்.

எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் செல்கள் இயல்பான வளர்ச்சியைஅடையாதபோது இரத்த சோகை, நோய் தொற்று, ரத்தக் கசிவு போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சோர்வு, பலவீனம், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத் திணறல், எளிதில் இரத்தக்கசிவு, எலும்பு வலி, உடல் எடை குறைவு, பசியின்மை, அதீத ரத்தப்போக்கு உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதன் போது உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

இதற்காக மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனையில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம், அதனுடைய செயல்பாடு ஆகியவை கண்டறியப்படும்.

அவை இயல்பான அளவைவிட அசாதாரணமான நிலையில் இருந்தால், பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். 

சிலருக்கு எக்ஸ்ரே மற்றும் எலக்ட்ரோகார்டியோகிராம் போன்ற பரிசோதனைகள் மூலமும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்  மருந்துகள் மற்றும் கீமோ தெரபி என்ற சிகிச்சையின் மூலம் எலும்பு மஜ்ஜையில் உண்டாகும் அசாதாரணமான உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைத்து நிவாரணமளிப்பார்கள். சிலருக்கு இத்தகைய பாதிப்பின்போது பல்லியேட்டிவ் கேர் எனப்படும் முழுமையான வலிநிவாரண சிகிச்சையையும் இணைத்து வழங்குவர்.

டொக்டர் பிரேம் குமார்

தொகுப்பு அனுஷா.