பாகிஸ்தானில் மின்சார கட்டணம்  அதிகரிப்பதால்  இரட்டிப்பாகும் கடன்

By Gayathri

25 Aug, 2021 | 05:10 PM
image

மின்சாரம் கட்டணங்கள்  தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுக் கடன் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2020-21 நிதியாண்டுக்கான இறுதி சுற்றறிக்கையில், மின்சாரம் இழப்பைச் சமாளிக்க அரசாங்கம் தவறியதால், நாட்டில் கடன் 2.28 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.

முன்னதாக, இம்ரான் கானின் கட்சி, டிசம்பர் 2020 க்குள் சுற்றுக் கடனை பூஜ்ஜியமாகக் குறைப்பதாக உறுதியளித்திருந்தது, ஆனால் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்  ஆட்சிக்கு வந்த பிறகு அது கிட்டத்தட்ட 1.148 டிரில்லியனில் இருந்து 2.28 டிரில்லியனாக இரட்டிப்பாகியுள்ளது.

பொதுக்கடன் என்பது செலுத்தப்படாத அரசாங்க மானியங்களின் அடுக்காகும், இதன் விளைவாக விநியோக நிறுவனங்களில் கடன் குவிந்துள்ளது. 

மின்சக்தித்துறையின் செயற்றிறனை மேம்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் கடந்த ஆண்டு மின் கட்டணத்தை அதிகரித்ததன் ஊடாக நுகர்வோர் மீது 150 பில்லியன் கூடுதல் சுமை சுமத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மின் துறையின் நிலைமை பலவீனமாக உள்ளது என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, பிடிஐ பொதுக் கடனில் ரூபா 464 பில்லியனைச் சேர்ந்துள்ளது.  இந்த தொகை அடுத்த ஆண்டில் ரூபா 538 பில்லியனாக அமையும் என  தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06