ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற மாற்றுத்திறனாளி என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் பெய்ஜ் கிரெக்கோ தனதாக்கிக்கொண்டார்.
அதுமட்டுமல்லாம் அப் போட்டியில் புதிய உலக சாதனையையும் அவர் படைத்தமை விசேட அம்சமாகும்.
டோக்கியோ இஸு வெலோட்ரோம் அரங்கில் இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான சி 1-3 பிரிவு 3,000 மீற்றர் தனிநபர் பேர்சூட் வகை சைக்கிளோட்ட இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று பெய்ஜ் கிரெக்கோ தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இப் போட்டியை 3 நிமிடங்கள், 50.815 செக்கன்களில் நிறைவுசெய்த கிரெக்கோ, புதிய உலக சாதனையையும் படைத்தார்.
போட்டி ஆரம்பித்தது முதல் கடைசி வரை முன்னிலையில் இருந்த கிரேக்கோ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சீன வீராங்கனை ஸியாஓமெல் வெங்கை இலகுவாக வெற்றிகொண்டார். இப் போட்டியில் வெங் (3:54.975) வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
இப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றை 3 நிமிடங்கள் 55.781 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் வெங் உலக சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
ஆனால் இறுதிப் போட்டியில் அந்த உலக சாதனையை முறியடித்த கிரெக்கோ புதிய உலக சாதனையைப் படைத்தார்.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் க்ளாரா ப்றவுணை வெற்றிகொண்ட ஜேர்மனியின் டெனைஸ் ஷிண்ட்லர் (3:55.120) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தனிநபருக்கான பேர்சூட் வகை சைக்கிளோட்டம் என்பது ஓவல் வடிவிலான அரங்கின் சுவட்டுப் பாதையில் இரு புறங்களின் மத்திய பகுதியிலிருந்து ஆரம்பித்து நடத்தப்படும் போட்டியாகும்.
போட்டித் தூரத்தை குறைந்த நேரத்தில் நிறைவு செய்பவர்கள் வெற்றியாளர்களாக பிரகடனப்படுத்தப்படுவர்.
(என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM