ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு முதலில் விழித்ததோடு  ஐ.தே.க கடந்த காலத்தில் தவறுகளை இழைத்திருந்தால் அதற்கு  மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனம் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது அரசியல் தலைவர்கள் கொல்ப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்த்தில்  சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துணிந்து செயற்பட்டதால் பல விளைவுகளை தவிர்க்க முடிந்தது. ஒரு தமிழ்த் தலைவர் இவ்வாறன நடவடிக்கைகளில் ஈடுபட்டதையிட்டு நாம் பெருமையடைய வேண்டும். அவ்வாறான ஒரு இல்லாதிருந்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்தாபிப்பதற்கு தலைவர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஆகவே அவருக்கு நாம் எமது நன்றிகளைச் என்றும் செலுத்தவேண்டும் என்றார். 

அதேவேளை  ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலத்தில் தவறுகள்  இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பைக் கோருகின்றேன் எனக்குறிப்பிட்டவர் இன்றுவரையில் ஐ.தே.கவின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.