தயாராகிறது சிறந்த இலங்கை கிரிக்கெட் குழாம் ......

By Gayathri

25 Aug, 2021 | 01:37 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட அணிகளின்  தலைவராக செயல்பட்டு வரும் தசுன் ஷானக்க நேற்று நிறைவடைந்த  'இன்விடேஷனல்' இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக விளங்குகிறார். 

இப்போட்டித் தொடரின் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பந்துவீச்சு பயிற்றுநருமாகவிருந்த சம்பிக்க ராமநாயக்கவின் மகனான 23 வயதான ஹிமேஷ் ராமநாயக்க திகழ்கிறார்.

உலக இருபதுக்கு 20 தொடருக்காக சிறந்தவொரு இலங்கை குழாத்தை தயார்படுத்துவதன் முதற்கட்டமாக எஸ்.எல்.சி. இன்விடேஷனல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.

இதன் இறுதிப்போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையிலான ரெட்ஸ் அணியை தசுன் ஷானக்க தலைமையிலான கிறேஸ் அணி வென்றுசம்பியனானது.

இந்நிலையில் இப்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்து பார்க்கையில் துடுப்பாட்டத்தில் தசுன் ஷானக்க 2 அரைச் சதங்களுடன் 258 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தை பெற்றுக்கொண்டார். 

இவர் 6 போட்டிகளில் 140 பந்துகளை எதிர்கொண்டு 24 பெளண்ட்ரிகள் மற்றும்  14  சிக்ஸர்களை விளாசியிருந்தார். 

கிரீன்ஸ் அணியின் கமிந்து மெண்டிஸும் ரெட்ஸ் அணியின் தினேஷ் சந்திமாலும் அடுத்த இரண்டு இடங்களை வகிக்கின்றனர். 

இதில் கமிந்து மெண்டிஸ்  4 போட்டிகளில் விளையாடி 115 எதிர்‍கொண்டு 193 ஓட்டங்க‍ளை குவித்தார். 

13 பெளண்ட்ரிகள், 8 சிக்ஸர்களை விளாசியதுடன் 3 அரைச் சதங்களையும் அடித்தார். 

சந்திமால் 6 போட்டிகளில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர் 17 பெளண்ட்ரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை மாத்திரம் அடித்திருந்தார். 

பந்துவீச்சைப் பொருத்தமட்டில் முதல் நான்கு வீரர்களுமே தலா 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். 

எனினும் விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் ஹிமேஷ் ராமநாயக்க முன்னிலைப் பெறுகிறார். 

இதுவரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதிக்காத வலது கை வேகப்பந்துவீச்சாளரான ரெட்ஸ் அணிக்காக விளையாடிய ஹிமேஷ் ராமநாயக்க 4 போட்டிகளில் ‍ 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி, இப்போட்டித் தொடரில அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். 

இ‍த்தொடரில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை இவரின் சிறந்த பந்துவீச்சு பெறுதியாக விளங்குவதுடன், 12.85 என்ற பந்துவீச்சு சராசரியையும் 9.4 பந்துகளில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

பந்துவீச்சில் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் கிறேஸ் அணியின் நுவன் பிரதீப், புலின தரங்க, ரெட்ஸ் அணியின் சீக்குகே பிரசன்ன ஆகியோர் காணப்படுகின்றனர். 

இதில்  நுவன் பிரதீப் 5 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன்,  புலின தரங்க மற்றும் சீக்குகே பிரசன்ன இருவரும் தலா 6 ‍போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை, களத்தடுப்பில் அதிக பிடியெடுப்புகளை எடுத்தவராக சீக்குகே பிரசன்ன விளங்குவதுடன், விக்கெட் காப்பில் 5 ஆட்டமிழப்புகளுக்கு துணை நின்று அதிக ஆட்டமிழப்புகளை செய்தவராக தினேஷ் சந்திமால் காண்படுகிறார். 

இவர்களைத் தவிரவும், அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷாரா, நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு மதுஷங்க, சாமிக்க கருணாரட்ண, அஷேன் டேனியல், பெத்தும் நிஸ்ஸங்க,சதீர சமரவிக்ரம ஆகியோரும் சிறப்பாக பெறுபேறுகளை ‍கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12